| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மோகினிப் பெண் |
| 300 | : | _ _ |a வாழ்வியல் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a மோகினி என அழைக்கப்படும் கவர்ச்சியும், மிரட்டலும் கொண்ட பெண்களில் ஒரு வகையினர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பேரழகியாய் விளங்கும் இப்பெண் வலது காலை ஊன்றி, இடது காலை குறுக்காக வைத்து குஞ்சித பாதமாக ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கிறாள். தன் இரு கைகளாலும் வீணையைப் பிடிப்பது போல தன் நீண்ட, அடர்ந்த கூந்தலைப் பிடித்துள்ளாள். குளித்து முடித்த ஈரக்கூந்தலாய் இருக்க வேண்டும். ஏனெனில் கூந்தல் துணியினால் சுருட்டப்பட்டது போல் தெரிகின்றது. கூந்தலிலிருந்து சொட்டுகின்ற நீரை இப்பெண்ணின் வலது காலடியில் நிற்கும் பட்சியொன்று தலையை மேல் நோக்கி தன் அலகினால் அருந்துகிறது. இப்பெண் ஆடையற்றவளாகத் தெரிகின்றாள். இவளின் வலது தோளில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. நேர்வகிட்டில் தொய்யகமும், வகிட்டின் இருபுறமும் சந்திர, சூரிய புல்லகங்களும் விளங்குகின்றன. செவிகளில் செவிப்பூக்கள், தாடங்கம் எனப்படும் பெரிய தோடு, கழுத்தில் ஆரம், கைகளில் முத்து மற்றும் பொன்னாலான தோள்வளை, முன்வளைகள் அணிந்துள்ளாள். இப்பெண்ணின் இடது காலருகே ஒரு பணிப் பெண் காட்டப்பட்டுள்ளாள். பணிப்பெண்ணின் உருவம் அழகியின் இடை வரையே உயர்ந்துள்ளது. வைஷ்ணவ நிலையில் நின்றுள்ள இப்பெண் இடது கையை தளிர்க்கையாக நீண்டு தொங்கவிட்டபடியும், வலது கையால் எச்சரிக்கை முத்திரை காட்டியபடியும் நிற்கிறாள். கணுக்கால் வரையிலான நீண்ட ஆடையணிந்துள்ள இப்பெண் தலை, செவி, கழுத்து, கைகள், கால்களில் அணிகள் கொண்டுள்ளாள். |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், மோகினி, பெண், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000515 |
| barcode | : | TVA_SCL_000515 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |